Saturday, February 28, 2009

பரீட்சைக்கு நேரமாச்சு

நம்ம ஊரில் வெயில் சீசன்,மழை சீசன், சங்கீத சீசன் ,madras eye சீசன் இப்படி பட்டியல் போட்டு மாளாது..
இது எல்லாத்தையும் விட february ,march வந்தால் பரீட்சை சீசன்..எல்லா வீட்டிலயும் இது ஒரு மேளா தான்..


குழந்தைகள் முதல் பெரியவர் வரை..இது ஒரு tension காலம்..

ஏன் பெரியவர் வரைனு சொல்றேனா.. October மாசம் விடிகார்த்தால American embassy வாசலிலெ queue நிக்கறமாதிரி நின்னு வாங்கின ஸ்கூல் அப்ளிகேஷனுக்கு நேர்முக தேர்வு பெற்றோருக்கு நடக்கும் நேரம்..

பழைய G.K புத்தகங்கள் எல்லாம் தூசி தட்டி எடுத்து விழுந்து விழுந்து படிக்கும் தாய் தந்தை குலங்கள் எத்தனையோ..

இதுக்கு அடுத்தது.. பத்தாம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருக்கும் வீடுகள்..

வருஷம் முழுதும் இந்த வீடுகளில் திகில் படம் ஓடும்..

எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் அறிவுரை மழை பொழியும்..

வேற யாருக்கு.. அம்மா அப்பாவுக்கு தான்..!!!!
குழந்தைகள் மனம் கோணாமல் நடப்பது எப்படினு வகுப்புகள் நடக்கும்..

பள்ளிக்கு வருகிற counselling மக்கள் எல்லாம் .. குழந்தைகளுக்கு டென்ஷன் இல்லாமல் relaxed ஆக தேர்வை சந்திப்பது எப்படி, அதை விட முக்கியமாக நீண்ட நேரம் படிக்கும் போது இடை இடையே பிடிச்ச விஷயங்களில் மனம் செலுத்துவது எப்படி என்று அழகாக சொல்லி தருகிறார்கள்.."பிடிச்ச பாட்டை கேளுங்க இல்ல ஒரு படம் வரைஞ்சு பாருங்கனு positive advice கொடுக்கிறார்கள்..

இந்த நேரத்தில் நான் பரீட்சைக்கு படித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது...ஒரு சின்ன flash back..

அப்பொதெல்லாம் தூர்தர்ஷனில் கூட பரீட்சை சமயங்களில் "குலேபகாவலி"," ஒளவையார்" "மந்திரிகுமாரினு அதர பழசு படங்கள் தான் திரையிடப்படும்..

ஆனா.. நமக்கு அந்த நேரத்தில " முதியோர் கல்வி, வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளெல்லாம் படு intersting ஆ பார்க்க தோணும் ..

அதே போல எல்லா தேர்வின் போது பரீட்சை ஹால் போகும் முன் நான் படித்த பள்ளி கிறிஸ்த்துவ பள்ளி என்பதால் church ல் special prayer நடக்கும்..

பய பக்தியோட பாதிரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி போன நாட்கள் அவை....

அடுத்தது மேல் படிப்பு என்ன படிக்கணும்னு பெற்றோரும் மற்றோரும் கூடி பேசி நல்லது எதுனு நமக்கு சொல்லி கொடுத்த அன்றொரு காலம்..

இன்றைய இளைய தலைமுறைகள் மிக தெளிவான ஒரு பார்வையில், பாதையில் நாம் என்ன செய்ய போகிறோம் அதற்கு என்ன தேவை என்பதை நன்றாய் உணர்ந்து .. தன் திறமைக்கு ஏற்ற வழி எது என்ன என்பதை நன்கு ஆராய்ந்து செயல் படும் நிலை இப்போது..

உங்கள் எல்லாருக்கும் மிக நல்ல வாய்ப்புகள் கிட்டி உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ..
AR.Rahman பாணியில்.."எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே..
"மாணவன் மனது வைத்தால்".. என்று இந்த நல்ல எழுச்சி தரும் பாட்டுடன் ...

அத்தனை மாணவ சமூகத்திற்கும்
I WISH YOU ALL A VERY GOOD LUCK IN YOUR EXAMS..
akilacsr

Thursday, January 22, 2009

அந்த கருப்பு வெள்ளி...

January 23, 2004...

"அந்த நாளும் வந்திடாதோ "..

எத்தனையோ நாட்களுக்காக , கணங்களுக்காக ஏங்கியதுண்டு..

ஆனால்.. இந்த நாள்..

இன்று நினைத்தாலும்.. உள்ளமும் உடலும் நடுங்கும் நாள்..

ஏன் வந்தது என்று எண்ணி மருகும் ஒரு நாள்..

"வாசலிலே மாக்கோலம்.. வீட்டினிலே லக்ஷ்மிகரம்" என ஊரெங்கும் தை வெள்ளி கொண்டாட்டம் ஒருபுறம்..

புதிதாக கட்டிய அந்த திருமண மண்டபத்தின் முதல் முகூர்த்தம் நெருங்கும் நேரம்..காலை 9.15 மணி..

எங்கும் சந்தோஷ சிரிப்பு, உபசாரம், விசாரிப்புகள்..குதூகலம் உச்சத்தில் இருந்த நேரம்..

வாழ்த்த வந்த முதியோர்கள், விளையாடி திரிந்த மழலை பட்டாளங்கள் ,

களையாய் வளைய வந்த கன்னிகள், பட்டு புடவைகள் சரசரக்க வளையல் சத்தம் மெட்டுபோட..

என எங்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி வெள்ளம்..

வாத்திய கோஷம் ஒரு பக்கம் முழங்கி கொண்டு இருக்க..

மாங்கல்ய தாரணம் நடக்க சில நிமிடங்களே.. இருந்த அந்த நேரம்..

சிறு தீப் பொறி..பொசுங்க ஆரம்பித்தன.. அலங்கார வண்ண வண்ண காகிதங்கள்..

கண்சிமிட்டும் நேரத்தில்..தற்காலிகமாக போடப்பட்ட கூரை பற்றி எறிய ஆரம்பித்தது..

எங்கும் தீ.. தீ.... தீக்கங்குகள் தான்..

சிரிப்புகள் அலறலாய் மாற.. எங்கும் அழுகையும் .. ஓலமும்..

இருந்ததோ ஒரே வழி..

தப்பிக்க எத்தனித்தனர் வந்திருந்த அத்தனை பேரும்..

இதில் வெளியேர முடிந்தோருக்கு. புது ஜன்மம் அன்று..

முயன்று தோற்றோர்.. முகம் கூட அடையாளம் தெரியவில்லை..


ஒளி இழந்தன பல வீடுகள்..

எத்தனை இழப்புக்கள்..

வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம்.. எங்கும்..

என் வீட்டுலும் இருள் சூழ்ந்த நாளது..

உறவிலே என் அன்னையின் தமக்கை..

ஆனால்... என் உள்ளத்தை பொறுத்தவரை என் அன்னைக்கு மேலாக என்னை வழி நடத்தியவள்..

தோழியாய் துணை தந்தவள்..

வாஞ்சையாய் வழி காட்டியவள்..

நல்லதை நயமாக எனக்கு சொல்லி தந்தவள்..

பேரில் மட்டுமல்ல குணத்திலும் அவள் ஒரு சாந்த சொரூபி..




பளிச்சென்ற புன்னகை..

நடமாடும் விவித பாரதியாய்.. மெட்டுக்கள் முணுமுணுக்க.. வேலை பார்க்கும் பாங்கு.. எதை சொல்ல..

"கடவுள் எங்கே?" .. இந்த கேள்வி என் மனதில் திரும்ப திரும்ப கேட்டு சலித்து போய் விட்டேன்..

கனவுகள் பல சுமந்து.. கை கூடும் வேளையில்.. காணாமல் போனதேனோ..???????

."சக்கரை நிலவே..பெண் நிலவே ..
காணும் போதே கரைந்தாயே..
நிம்மதி இல்லை.. ஏன் இல்லை..
நீ.. இல்லையே.."

நீ விரும்பி முணுமுணுத்த ஒரு பாடல்...


உன் இனிமை குரலில் இனி எப்போது கேட்பேன்???????


காலம் உருண்டோடலாம்..

ஆனால்.. என் கண்ணில் இருந்து உருண்டோடும் கண்ணீர் நின்றபாடில்லை..

மிஞ்சி இருப்பது உன் பற்றிய நீங்கா நினைவுகள்..நினைவுகள்..

We miss YOU .. We miss YOU

Tuesday, December 30, 2008

happy new year.. கொண்டாடுவோம்

புத்தாண்டு..

இப்பொ எல்லாம் party , dance,get together நு life style மாறிடுத்து..

ஆனா.. அதெல்லாம் தெரியாத என் சின்ன வயதில்.. புது வருஷம் கொண்டாட்டமே வேற..

தாத்தா.. டிசம்பர் 31 ம் தேதியே.. newspaper எல்லாம் பேப்பர் காரனுக்கு போட அழகா எடுத்து வெச்சு..
ஜனவரி 1ம் தேதி.. பேப்பர் வரிசையா , மடிப்பு கலையாமல் வைக்க இடம் பண்ணிடுவார்..
அடுத்தது காலண்டர் எல்லாம் புது வாசனையோடு அந்தந்த ஆணியில் தொங்க விடுவார்..

சாமி காலண்டர், பஞ்சாங்க காலண்டர், scenery இருக்கிற காலண்டர் எல்லாம் ஒண்ணாம் தேதியை வரவேற்கும் !!!!!!!!!

daily sheet ராத்திரி தூங்கும் முன்னாடியே ஒண்ணாம் தேதி கிழிக்கபட்டு விடியலுக்காக காத்திருக்கும் ..

ஜனவரி ஒண்ணு ... சீக்கிரமே எழுந்து குளித்து பூஜை பண்ணிவிட்டு ..

வெள்ளிக் காசு ,தங்க காசு அதோட பிள்ளையார் , லக்ஷ்மி சரஸ்வதி படமும் கையில் வெச்சுண்டு
அதில் தான் கண் முழிக்கணும்னு எல்லாரும் நு .. அவருக்கு ஒரு system..

வருஷம் பூரா எல்லா நன்மைகளும் கிடைக்கணும்னு அவரோட வாஞ்சை இப்போ நினைத்தாலும்..இனிமையா இருக்கு..

பாட்டி.. தன் திறமையை சமையலில் காட்டுவா..
எல்லாரும் கூடி உட்கார்ந்து சந்தோஷமா போன வருஷம் நடந்த சம்பவங்களை அசைபோட்டு..
ஆஹா..

அந்த இயற்கையான கொண்டாட்டம் .. இப்பவும் என் மனதில் பசுமையா இருக்கு..

வாழ்க்கை ஓட்டத்தில்.. எல்லாம் மாறினாலும்..

இந்த நினைவுகள் எல்லாம் தான் மனதில் என்றும் நிலைத்து இருக்கு என்பதில் சந்தேகமே ல்லை..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!

Tuesday, December 9, 2008

அவள் தூங்கி போனாளே....

ஷீலா டீச்சர் specilaity.. நீலாம்பரி பாடாமலே தூங்கும் ஒரு ஜீவன்..

school interval timeல .. மத்த எல்லா டீச்சரும் ஸ்கூல்ல ஓசியா கிடைக்கிற காபிக்கு(அதுக்கு பதில வெறும் வெந்நீரே குடிக்கலாம்!!!!!!!!)
நம்ம ஷீலா டீச்சர் அந்த cycle gap கூட விடாம தூங்க ஆரம்பிச்சுடுவா..
பெல் அடிச்சதும்..'டீச்சர் டீச்சர் நு வேப்பிலை அடிக்காத குறையா எழுப்பணும்..எப்பவும் ஒரு அரை தூக்கத்தில தான் இருப்பா..

இப்படி கதை ஓட.. எங்க வீட்டின் ration card ல பேர் சேர்க்காத குறைதான்..

ராஜ உபசாரம் வீட்டில..அவங்களுக்கு..(அதுக்காக மார்க் அள்ளி போட்டு நன்றி கடன் தீர்க்கிற பெரிய மனசு இல்லாத ஒரு நல்ல ஆசிரியை!!!!!!!!)

எனக்கு அரைப் பரீட்சை முடியும் நேரம்..

நான் என் பாட்டியை பார்க்கனும்னு பிடிவாதம் பிடிக்க..

டீச்சரும் அதே ஊர்க்காரர் என்பதால்..அம்மா எங்க ரெண்டு பேருக்கும் அந்த காலத்து express train board போட்டுண்டு ஆமை வேகத்தில் போற "Day express " ல டிக்கெட் book பண்ண..

நானோ ஒரே சந்தோஷத்தில..

ஊருக்கு போகும் நாளும் வந்தது..

Egmore station போய் wait பண்றோம்.. பண்றோம்..

ஷீலா... ஷீலா..னு ( ரஜினி style ல பாடாத குறைதான்)

train கிளம்பற time ஆச்சு..

compartment.. compartment ஆ ஆளாளுக்கு தேட..

எங்கே அவள் .. என்றே மனம் நு மனசுக்குள்ள எல்லா பாட்டும் remix ஆ ஓட..
train விசிலடிச்சு கிளம்ப..

நானோ.. மீளா துயரத்தில்...

அம்மாக்கு ஒரு சந்தேகம்.. டீச்சர் தாம்பரம் station ல wait பண்ணின்டு இருப்பாளோனு.??????

ஓடினோம்.. ஓடினோம்.. தாம்பரம் station தேடி..(train கண்டிப்பா 2 மணி நேரம் ஆகும்.. எக்மோரிலிர்ந்து தாம்பரம் வர..அவ்வளவு.. வேகம்..என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை..) அங்கேயும் ஏமாற்றம்..

எப்படி ஊருக்கு அனுப்பறதுனு பேச்சு வார்த்தை நடக்க நடக்க..

trainம் ஊர்ந்து ஊர்ந்து வந்துடுத்து..

நானோ ஒரே பிடிவாதம்.. போகனும்னு..train ல ஏறிட்டேன்..

கையில் ஒரு தயிர் சாதம் tiffin box மட்டுமே ..

எட்டணா கூட கையில் கிடையாது..

என் இந்த பிடிவாதத்தில் ஒண்ணும் முடிவு பண்ண முடியாம.. என் அம்மா. தடுமாற..

guard விசில் அடிக்க..

station master பச்சை கொடி காட்ட..
train.. கிளம்பிடுத்து..

யாரோ முகம் தெரியாதவர்களிடம் என் அம்மா..பார்த்துக்கோங்கோனு சொல்ல..

நான் விட்டேன் ஜூட்.. என் பிறந்த மண்ணை நோக்கி..

"அவள் தூங்கிப்போனாளே..
ரயிலை கோட்டை விட்டாளேனு'


இப்போ ஜாலியா பாடினாலும்... அது ஒரு தடக்.. தடக்.. திக்.. திக் ..பயணம் ..
என் தனிமை ரயில் பயணத்திற்கு பச்சை கொடி காட்டியது...உன் தூக்கம் தந்த ஊக்கமே..

'நெஞ்சம் மறப்பதில்லை..
அது (உன்)நினைவை இழப்பதில்லை"...


எங்கிருந்தாலும் வாழ்க.....
அன்புடன்
akilacsr

Friday, November 28, 2008

குடையால் வந்த குடைச்சல்..!

அது ஒரு மழைக் காலம்..

மெட்ராஸ் .. இப்போதைய சிங்கார chennai..

ஒரு கொட்டும் மழை காலை..

கரண்ட் இல்லாததால்.. transister ம் காதுமா எல்லாரும் வானிலை அறிக்கை கேட்டுண்டு leave announcement வராதானு ஏங்க..

மழையினால் மனமிரங்கா மாநில அரசு மெளனம் சாதிக்க..

எல்லாரும் அவரவர் தொழிலை அடாது மழையிலும் விடாது கவனிக்க வேண்டிய கட்டாயம்..

நமக்கு மழையில் school போறதுனா ஒரு தனி குஷி தான்..

almirahல அழகாய் மடிச்சிருந்த raincoat ..எனக்கும் மழையில் நனைய ஒரு chance கொடேன்னு என்னை பார்த்து ஏக்கமாய் பார்க்க ..

நானோ .நேற்று பெய்த மழையில் முளைத்த..

பூ போட்ட குடையை எடுத்துண்டு விட்டேன் ஜீட் ஸ்கூலுக்கு..

என் சித்தி ஆசையாய் வாங்கின குடை என்பதால்.. பய பக்தியோட .. ஒதுக்குபுறமா ஒரு இடத்தில் விரித்து விட்டு.. ஓடினேன்.. classroom..

சாயந்திரம் school பெல் அடிச்சதும் தேடினேன்.. தேடினேன்.. என் புது குடையை..கிடைச்சாதானே..

"போனால் போகட்டும் போடானு" மனசை தேத்தினாலும் ..

வீடு வர வர.. வயிற்றில் ஒரே புளி கரைப்பு தான்..

நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் ..குடை பற்றி புலன் விசாரணை பண்ண..

என் சித்தி ஸ்கூல் வந்து டீச்சரை சந்திக்க ஒரு மனதா முடிவானது..

அடுத்த நாள்.. கடங்காரன் ஒண்ணாம் தேதி ஆபிஸ் வாசலில் நிக்கிற மாதிரி..

சித்தி ஆஜர்..classroom வாசலில்..

"class teacher தேடி நான் ஓட....

corridor ல் என் teacher வர..

என் சித்தி .. "ஷீலா எப்படிடி இருக்கேனு" கேட்க..(ஷீலா.. என் teacher பேரு)

பிரிந்த நண்பிகள் ஒன்று கூடிய அந்த நேரம்..

கும்மி அடிக்க ஆரம்பித்ததில் .. என் சித்தி குடை பற்றி மறக்க..நமக்கு ஒரே கொண்டாட்டம்தான்..

எங்க சித்தி ஒரு over enthusiasmல "ஷீலா..sunday வீட்டுக்கு வாயேன்"னு address கொடுக்க..

என் நண்பிகள் எல்லாம் என்னை பொறாமைல பார்க்க..

அந்த sundayம் வந்தது..

calling bell அடிக்க ..கதவின் பின்னே.. class teacher..

வீட்டில ஒரே உபசாரம்..

ஆனா.. "sunday வரும் பின்னே.. ஷிலா வருவாள் முன்னேனு" டீச்சர் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஆஜர் ஆக..

"அந்த நடுங்கும் ஞாயிறுகள்"னு டப்பிங் படமே எடுத்துடலாம்..

எத்தனை சுதந்திரம் இழந்த sundays..(டீச்சர் கிட்டே நல்ல பேர் வாங்கணுமேனு தான்!!!!!!!)

இப்படியாக..குடை பிடிக்க குடைச்சல் வந்த காலமது..

ஆனா.. அந்த டீச்சரை இன்னும் மறக்காம இருக்க காரணம் ஒண்ணு உண்டு..

அதை தெரிஞ்சிக்கணுமா..?

கொஞ்சம் wait பண்ணுங்கோ..
.

Monday, November 24, 2008

Boost is the Secret of My சமையல் !

காவேரி கரை வாசம் விட்டு.. கூவம் வாசத்திற்கு பழக ஆரம்பிச்ச நாட்கள்..

எல்லாம் புதுசு.. வீடு புதுசு.. school புதுசு.. teacher புதுசு..

எல்லாத்தையும் விட.. தனிமை புதுசு..

school விட்டு வந்தா.. பூட்டு தான் வரவேற்கும்..

அம்மா அப்பா.. வேலைக்கு பார்த்துகொண்டு இருந்ததால்..

அம்மா..பாவம்..

காலையிலே evening tiffin முதற்கொண்டு டப்பால போட்டு வெச்சுட்டு போய்டுவா..

சாயந்தரம் school விட்டு வந்ததும் .. ஆறிப்போன இட்லியும், துவண்டு போன தோசையும்.. என்னை பார்த்து.. ஐயோ பாவம்னு சொல்லும்..

house owner aunty தான் என்னோட care taker ..

ரொம்ப அன்பானவள்..

இப்படி நாட்கள் வீட்டுகார அம்மாகாரு..(தெலுங்கு மாமி.. அதான் அப்படி சொன்னென்)புண்ணியத்தில..ஒட....

ஒரு நாள்..எங்க அம்மாகிட்டெ.. "நாளைலேர்ந்து உங்க பொண்ணுக்கு நானே boost கல்ந்து தரேன்னு அறிக்கை விட்டா..

அன்னிக்கு அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம்..

"எத்தனை நல்ல மனுஷி .. இருந்தா மாமி மாதிரி இருக்கணும்னு.".

அங்கே இருந்த ஒன்பது குடித்தன காரர்களும்.. புகழ் மாலை போட..

அடுத்த நாள் நானும்.. ஆவலாய்.. school விட்டதும்.. boost தேடி ஓட..

மூலையிலே பத்திரமா மூடி வெச்ச tumbler காண்பிச்சா.. சுந்தரத் தெலுங்காள்.

குடிக்க ஆரம்பிச்சேன்..

முதல்ல.. பால் மட்டும் வந்தது..

(அம்மா.. boost bottle குடுக்க மறந்து போய்ட்ட போல இருக்குனு நினச்சேன்)

ஒரு ரெண்டு முழுங்கு குடிச்சு முடிச்சதும்.. ஏதோ கட்டி வந்து தொண்டையை அடச்சது..chocolate வாசத்துடன்..

பாலோட சேராத அந்த boost ஐ கற கறனு தின்னு முடிச்சு, பேந்த பேந்த விழிச்ச வேளையில்...

அடுத்து ஒரு கற முற item tumbler அடியிலேர்ந்து வந்தது..

அது வேற ஒன்னுமில்ல..சக்கரை தான்.

இப்படி தோண்டத் தோண்ட பிச்சைகாரன் பாத்திரம் போல..

ஒன்னோடு ஒண்ணு ஒட்டாமல்.. ஒவ்வொன்றாய் என் வயிற்றில் இறங்க..

ஐயோ.. பட்ட பாடு.. அய்யா சாமி..

இன்னி வரைக்கும் நெஞ்சை விட்டு அகலாத ஒரு சுவை

இப்படியொரு பானகம் இது வரை யாருமே குடிச்சு இருக்க முடியாது..

இப்படி boost ஆசை புஸ்வாணமாய் போச்சு..

ஆனா மாமி கிட்டே ரொம்ப super ஆ இருந்ததுனு சொல்லிட்டென்..

அம்மா வந்ததும் சொன்னென்..நான் பட்ட கஷ்டத்தை .....

"உனக்கு நாக்கு ரொம்ப நீளம் "னு சொல்லி topic full stop வெச்சுட்டா..

இது ஒரு தொடர் கதையா போச்சு..

ஆனா..இந்த boost சகாப்தம் தான் என்னை சமையல் கட்டுக்குள் சீக்கிரம் நுழைய வைத்தது..

பங்காரு அம்மா எனக்கு ஒரு வழிகாட்டி..

எப்படினா..எங்கிருந்தோ வந்த எனக்கு அன்பு காட்டின பெருந்தன்மை....

தனக்கு நன்னா செய்ய தெரியாட்டியும்.. நல்லது செய்யனும் என்கிற மனசு..

(boost போட தெரியாட்டியும்.. school விட்டு வரும் குழந்தையின் தாகம் தீர்க்கும் அந்த எண்ணம்)

ஆனா நான் கத்து கொண்ட பாடமே வேற......என்ன தெரியுமா???

'நல்லது செய்யனும்னு நினச்சா....அதை நன்றாக செய்.."

"மற்றவர்களுக்காக ஒண்ணு செய்யும்போது நீ செய்த வேலை உனக்கு முதலில் திருப்தி தரதானு உன்னையே ஒரு தரம் கேட்டுப் பார்"..

சரியா நான் சொல்றது ?

அன்புடன்
அகிலா

Wednesday, November 19, 2008

நினைவோ ஒரு பறவை !

கொஞ்சம் rewind பண்ணி ஒரு 35 வருஷம் பின்னாடி போகலாமா..

காலை மணி 5:55..

vanthe maatharam..sujalaam.. sufalaam.. All India Radio la முழங்கற நேரம்..

தூங்கி கொண்டிருக்கும் எங்கள் படுக்கைகள் ஒவ்வொன்னா தாத்தா.. உருவும் நேரம்..

தரையில தடுமாறி தவக்களை போட்டு படுத்து..தோல்வியை தழுவி.. .

பாட்டி oho productions ல wholesaleல கலந்த காபி ஆறிடுமேனு..

அரக்க பரக்க அரைகுறையா பல் தேச்சுட்டு..

அந்த வீட்டில கறந்த பசும்பால்ல கலந்த filter காபியை "பேஷ் பேஷ் ரொம்ம்ப நன்னா இருக்குன்னு".. உசிலமணி styleல.. ஒரு இழு இழுக்கிற சொகம் இருக்கே..

ஆஹா.. தேவாமிர்தம்தான்..

இப்படியாக queue நின்னு(வீட்டில டிக்கெட் ஜாஸ்தி ஆச்சே)காலை கடனும், குளியலும் முடிச்சு.. ready ஆனா..

cycle rickshaw ஓட்டி ஓட்டி 'S' காலோட பெருமாள் ரிக்க்ஷாகாரர் புகையில, பொட்டு, செக்கசிவக்க பற்பசை விளம்பரத்துக்கு pose கொடுத்துண்டு நிப்பார்..

school, பாடம், படிப்பு நு இருந்தாலும்..பண்டிகை வந்தால் கொண்டாட்டம் தான்..

தீபாவளிக்கு பட்டாசு list போட்டு.. அதை வாங்கி காய வெச்சு.. பத்திரமா எடுத்து வெச்சு...

daily அத ஒரு தடவ.. கண்ணால பார்த்து சந்தோஷப்பட்டு தீபாவளிக்கு

காலம்பர சீக்கிரம் எழுந்து ஊருக்கு முன்னாடி வெடிக்கிற குஷியே தனி தான்..

அடுத்து இந்த பொங்கல் வரும் பாருங்கோ..பொங்கும் வீட்டில கும்பல்..

அதுவும் இந்த கோலம் போடறேன்னு போகி அன்னிக்கு அடிக்கிற ராக்கும்மி இருக்கே..ஆண்டவா..

என்னமோ.. switzerland ல இருக்கிற நினைப்பில.. ஒரு பெரிய scarf கட்டிண்டு..

சுத்தி சுத்தி பெரிய டிக்கெட் எல்லாம் கோலம் போட..

வாண்டுகள் நாங்க எல்லாம்... அவாளுக்கு தண்ணி கொடுத்து, கொசு அடிச்சு, முதுகு சொரிஞ்சு விட்டு..

எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சூரியனை வழிபட்டு, காக்கா பிடி கன்னு பிடி வெச்சு..

பொங்கல் release படத்தை.. தியேட்டரே மிரளறமாதிரி கும்பலா பார்த்த இனிமை...

இப்பொ நினச்சாலும்.. பொங்கலை விட தித்திப்பாய் இருக்கு..

Leave விட்டதும்.... தூக்கம் , TV இதே உலகம் நு காலத்தை ஓட்டற இந்த கால குழந்தைகளுக்கு..

காவேரில குளிச்சு, கவளமதை பாட்டி கையால் உருட்டி போட, கதைகள் பேசி சாப்பிட்ட காலத்தை சொன்னா..

கேட்க கூட மனசில்லாத nuclear family குழந்தைகளை நினைக்கும்போது..

இத்தனை விஷயம் இவர்கள் எல்லாரும் miss பண்றாளேனு ஒரு சின்ன வருத்தம் தான்..

குறைஞ்ச சம்பளம், கூட்டு குடும்பம்னு குட்டிகரணம் போட்டு கஷ்டப்பட்டாலும்

இத்தனை இன்பம் என் வாழ்வில் அள்ளித்தந்து..என் சின்ன வயசை சிங்காரிச்ச.. எங்க பாட்டி தாத்தாவை நான் ரொம்ப ரொம்ப miss பண்றேன்..

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை..

அந்த கால சக்கரத்தில் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்..

பேசறேன் அடுத்தpost ல என்னை பாதித்த மனிதர்களை பற்றி..

அன்புடன்
அகிலா

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு !

அப்படி என்னை தூக்கிவாரி போட வெச்ச விஷயம்..

ஜாதகத்தில இருக்கிற கோடு கட்டம் ரொம்ப பொருந்தினது..

(10 வருஷத்துக்கபறம் தான் உண்மை தெரிஞ்சது ஒரு பெரிய ஜோசியர் மூலமா.. இது பொருந்தியே இருக்க முடியாத ஜாதகம்னு... இதுதான் ஜோசியம் என்பதா..?????)

ஜாகை, job எல்லாம்.. அப்பாக்கு ok..

ஆனா.. என்னை மிரள வெச்ச அந்த எழுத்துக்கள் இன்னமும் என் கண் முன்னே நிக்கறது..

அது என்னனா.. Tom and jerry ல கூட என்னிக்காவது ஒரு நாள் jerry மாட்டிக்கும்..

ஆனா .. நான் துரத்தி துரத்தி கத்துக்க நினச்சு என்னை விட்டு olympic தங்க பதக்கம் வாங்கற speed ல ஓடி போன.. சங்கீதம் ...

பையனோட interests என்கிற இடத்தில.. கொட்டை எழுத்தில் "LOVES MUSIC" நு கிண்டலா என்னை பார்த்து கண் சிமிட்டியது..

அட பாவமே..என்ன கொடுமை sir இது..

"அப்பா.. அந்த பையன் பாவம் பா.. என்ன மாதிரி ஒரு ஞான சூன்யத்தோட என்ன பண்ணுவார்னு கேட்டேன்.."

'கல்யாணம் சொர்க்கத்தில நிச்சயக்கபடறது .. சங்கீதத்தில இல்ல".. நு என்னை சமாளிச்சு-fy பண்ணிட்டார்.'.அப்பா..

அவரோட வார்த்தைகள் 100% right....

மனசு ஒத்துபோனா போதும்..

காடு மலை நு நாங்க எங்க சுத்தினாலும்..

(நான் எத்தனை) சண்டைகள் போட்டாலும்..

சோதனைகள் தாங்கி.. சாதிக்க நினைக்கும் நாங்க என்னிக்குமே..

Made For Each Other Couple தான்..

"சொர்க்கமே என்றாலும் நம்ம சென்னை போல வருமா.." நு பாடின காலம் போய்..

இப்போ (இமய) "மலையோரம் வீசும் காத்து" நு பாடிண்டு ..

குழந்தைகள் என்னும் வட்டத்துக்குள் சுத்தி சுத்தி வந்தாலும்..

ரொம்ப miss பண்ற விஷயம் ஒண்ணு உண்டு..

சொல்றேனே.. அதை அடுத்த post ல..

அன்புடன்
அகிலா

என்ன சொல்லி நான் எழுத !

இப்படி மங்களம் பாடி முடிஞ்ச என் வீணை class கு

மீண்டும் திறப்பு விழா தந்த பெருமை,

என் friend ராஜி யோட அத்தை சரஸ்வதி மாமிக்கே போய் சேரும்..

கலை மனமும் கை மணமும் (கை மணம் ஏன்னு நீங்க கேட்கலாம்.. மாமி கல்கத்தா return..

அவா கை பட்ட dham aaloo நாள் முழுக்க சாப்பிடுண்டே இருக்கலாம்..
(north indian dish ஒரு பேரு அப்பொ கத்துண்டேன்)..

பெரிய வீணை ரெண்டும் சின்ன ஒரு வீணை ஒண்ணும் கல்யாணி மாமி கிட்டேர்ந்து விலைக்கு வாங்கி அவர் விட்ட பணியை தொடர ஆரம்பிச்சா..

எங்க சுருள் மாடி வீட்டு second floor லயே வீடு என்பதால்.. timings கிடையாது..

எப்போ மனசுக்கு தோனறதோ.. வந்து வாசிங்கோ சொல்ர.. ஒரு தங்கமான குரு..

அப்படியே.. எங்க class continue ஆகி இருந்தால் எவ்வளவு நன்னா இருந்திருக்கும்..

சரஸ்வதி மாமிக்கு சொந்த வீட்டில் போய் சுகமா வாழணும்னு ஏக்கம்..

நாங்க இருந்த வீட்டிலேர்ந்து 5 km distance ல வீடு கட்டிண்டு, வீணையும் மூட்டை கட்டிண்டு..

எங்களை மட்டும் விட்டுட்டு மாடம்பாக்கம் போய் settle ஆகிட்டா..

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

அதவிட கொடுமை என்னடானா..

வீணை வாங்க வசதி இருந்தும்..வீட்டில் வைக்க இடம் இல்லாத ஒண்டு குடித்தனம்..

இப்படியாக.. வீணை கனவு.. வீணாய் போனது..

கையில் மிஞ்சியது.. வீணை தந்தி தந்த தழும்புகள் தான்..

மனசை விட்டு ஆறாத வடுக்கள் தான்..

சங்கீதத்துக்கு ஒரு பெரிய good bye.. சொல்லி முடிச்சாச்சு..

கொஞ்ச நாள் feelings ஆ இருந்தது..

அப்பறம்.. சங்கீததுக்கும் நமக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லாமல் போச்சு

இப்படியே.. காலம் ஓடிப் போச்சு..

எனக்கு.. வரன் பார்க்கும் படலம் ஆரம்பித்தது..

நல்ல பையன்.. ரொம்ப நல்ல குடும்பம்..

கொடுத்து வெச்சு இருக்கணும் இந்த சம்பந்தம்னு அப்பா..

ரொம்ப சந்தோஷப்பட்டு என்கிட்ட அந்த ஜாதக copy காண்பிச்சார்..

அதுல பையன் பத்தின விவரங்கள் பார்த்தேன்..

அப்பா.. எனக்கு இந்த பையன் வேண்டாம்னு அலறினேன்..

ஏன்னு தெரிஞ்சிக்கணுமா..

wait .. பண்ணுங்கோ

என் next post வரைக்கும்..

அன்புடன்
அகிலா

எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா !

சங்கீதம்.. ஒரு வரம்..ஒரு வரப் பிரசாதம்..

எல்லாருக்கும்.. சுலபமா வராது..

எதுக்கு சுத்தி வளைச்சுனு நீங்க கேட்கறது என் காதில விழரது..

என்னோட தாத்தா சங்கீதம் தெரிஞ்ச வக்கீல்..

அந்த காலத்தில புதுக்கோட்டையில..

அத்தைகள் பாடினால் நாள் முழுக்க கேட்டுண்டே இருக்கலாம்..

என் அப்பா.. harmonium எடுத்து வாசிக்க ஆரம்பிச்சால்..ராக சஞ்சாரத்தில மூழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்கிடுவார்..

ஆனால்.. சோதனை என்னவென்று சொன்னால்..

இந்த குடும்பத்து வாரிசு எல்லாம்.."சங்கீதமா....கிலோ என்ன விலை என்று கேட்கிற.. மஹானுபாவர்கள்.

ஆனா.. கொஞ்சம் என் அப்பாவோட காத்து எனக்கு அடிச்சு..

எங்க ஆத்துகாரரும் கச்சேரிக்கு போறார்னு..

நானும் வீணை கிளாஸ் போனேன்..

நான் என் friend ராஜி, பெரிய ராஜி அக்கா..நாங்க மூணு பேரும் ஒரு group.

எங்க பாட்டு மாமி பேரு கல்யாணி ..

ரொம்ப தெய்வீகமா.. ரொம்ப musical ஆ இருப்பா..

மாமா.. அவர்.. மூக்கு.. அதுதான்.. highlight

வாரத்தில் ரெண்டு நாள் தான் class..

கடுப்பில சேர்ந்த class.. கொஞ்ச நாள்ல கலகலப்பா மாற ஆரம்பிச்சது..

காரணம் மாமாவோட குட மிளகாய் மூக்குதான்..

வீணை வாசிக்க ஆரம்பிச்சதும்.. அவர் பாடுவார் பாருங்கோ..

அவர் மூக்கு ஒரு ஜதி ஆடும் ... விடைச்சு விடைச்சு விரிஞ்சு அகண்டு..மூக்கிலே ஒரு உலகமே காட்டுவார்..

அதை நாங்க.. மூணு பேரும்.. ஜாடையா கண்ணால் சொல்லி.. பின்ன அடக்க முடியாமால் சிரிச்சு..

அங்கே இருக்கிற அத்தனை students attention divert பண்ணி.. ....

மாமா.. "சின்ன குழந்தைகள் எப்படி கலாட்டா பாருடி நு " மாமி கிட்ட வெகுளியா..சொல்லும்போது.. தப்பு பண்ணிட்டோமோனு ஒரு சோகம் வரும்..

சரஸ்வதி பூஜை அன்னிக்கு அவா ரெண்டு பேர் கிட்டயும் ஆசிவாதம் வாங்க ஒரு பெரிய queue நிக்கும்..

மாமியும் மாமாவும் அத்தனை students க்கும் அன்பா தர ஒரு ரூவா நாணயம் இருக்கே..

அது.. ஒரு கோடிக்கு சமம்..

இப்படியே சந்தோஷாமா போன நாட்கள் ஒரு நாள் முடிவுக்கு வந்தது..

வீணை மாமிக்கு குழந்தைகள் கிடையாது.

அதனால் காளஹஸ்தி க்கு போய்.. ஆசிரமத்தில் தங்கி அங்கேயே காலத்தை கழிக்க முடிவு பண்ணிட்டா..

எங்களை விட்டு அந்த அன்பான உள்ளங்கள் பிரிந்த நாளை இன்னிக்கும் மறக்க முடியாது..

இந்த காலம் மாதிரி photo எடுத்துக்கலை..

ஆனா அந்த இனிய நினைவுகள் இன்னிக்கும் பசுமரத்தாணி போல பதிஞ்சு இருக்கு..

அப்பறம்..எங்களுக்கு அவர்களை பத்தி எந்த தகவலும் கிடைக்கலை..

இப்படி ஏளனமா தொடங்கிய என் இசை ஆர்வம்.. எப்படி ஏக்கத்தில் முடிஞ்சதுன்னு

அடுத்த post ல சொல்ரேனே..!

அன்புடன்
அகிலா